எடப்பாடி தலைமையை மாற்ற வேண்டும்: முன்னாள் எம்.பி., பேச்சு

593பார்த்தது
எடப்பாடி தலைமையை மாற்ற வேண்டும்: முன்னாள் எம்.பி., பேச்சு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த கால நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நமக்கு தெளிவாக உணர்த்துவது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுகிற கட்சியே அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி இது நாடாளுமன்ற தேர்தல் தானே இது நமக்கான தேர்தல் இல்லை என்று இந்த தேர்தலை மெத்தனமாக கையாள்வது சரியான முடிவாக அமையாது. இரட்டை இலைக்காக விழுகிற வாக்குகளை தனக்கான வாக்கு வங்கியாக கற்பனை செய்யக்கூடாது. 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றாக வேண்டும். வெற்றியானது 10 தொகுதிகளுக்கு கீழ் சென்றால் பத்து தோல்வி பழனிசாமியாக இவர் பார்க்கப்பட்டுவிடுவார். இவர் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்களும் வாக்காளர்களும் வந்து விடுவார்கள். தேர்தலுக்கு பிறகு தலைமை மாற்றம் தவிர்க்கமுடியாதது ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி