தினமும் இரவு உணவை ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது சிறந்தது. சாப்பிட்டுவிட்டு உடனே படுக்காமல் சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்ட பிறகு உறங்கச் செல்வது நலம். இரவில் தயிர் ரகங்களை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகளும் கைகோர்த்துக் கொள்ளும். குளிர்ச்சி தன்மையுடைய இவற்றைக் காலத்துக்கேற்ற வகையில் எடுப்பது தான் புத்திசாலித்தனம்.