வயதானவர்களுக்கு வரும் கிட்ட பார்வையை சரி செய்ய பிரஸ்வியூ மருந்தை கண்களில் ஊற்றினால் 15 நிமிடங்களில் பிரச்சனை சரியாகிடும் என்றும் கண்ணாடி இல்லாமலேயே பேப்பர் புத்தகம் படிக்கலாம் என ENTOD நிறுவனம் தெரிவித்து இருந்தது. இதற்கு தற்போது இந்திய மருந்துகள் இயக்குனரகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த பிலோகார்பின் மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும், இது புதியதல்ல ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்து தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.