குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் பெரும்பாலும் மரபணு சார்ந்ததே தவிர, பெற்றோர்களின் வளர்ப்பினால் வருவது அல்ல. அதனால் குழந்தைகள் சாப்பிடாததற்கு பெற்றோர்களை குறை கூற முடியாது என இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியிட்டுள்ளது. சில உணவுகளை விரும்புவதும், சில உணவுகளை தவிர்ப்பதும், சாப்பிட வீம்பு செய்வதும் இதைப் பொருத்தே அமைகிறது எனவும் கூறியுள்ளது.