கொசுவுக்கு கோயில் கட்டியிருப்பதைக் கேட்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் அது உண்மைதான். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோக்ஷகுண்டம் கிராமத்தின் PHC வளாகத்தில் கொசுக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் எம்.சதீஷ்குமார் என்பவர் 2008ல் ரூ.5 ஆயிரம் செலவில் கட்டினார். ஆனால், இங்கு கொசுவை வழிபடுவதில்லை. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த கோவில் கட்டப்பட்டது.