பிரபலமான விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி துறைமுக பகுதியில் இருந்து தான் இங்கு வந்தது. விருதுநகரில் இருந்து சென்ற தொழிலாளர்கள் மூலம் சாதாரண பரோட்டா விருதுநகருக்கு வந்தது. சாதாரண பரோட்டா பொரிச்ச பரோட்டாவானது விருதுநகரில் தான். இன்றும் விருதுநகர் கடைகளில் பொரிச்ச பரோட்டா தான் அதிகமாக கிடைக்கும், ஏனெனில் இங்கு பொரிச்ச பரோட்டா தான் சாதாரண பரோட்டா. சாதாரண பரோட்டாவை இங்கு வாட்டு பரோட்டா என குறிப்பிடுகின்றனர்.