பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த வரிசையில் தான் மாதுளை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஜூஸில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சாறு செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.