காஞ்சிபுரத்தில் திமுக- அதிமுக மோதல்

50பார்த்தது
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் அருகே திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிள்ளையார்பாளையம் அருகே உள்ள வாக்குச்சாவடியின் வெளியில் திமுகவினர் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதை அதிமுகவினர் கண்டித்த நிலையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. போலீசார் மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி