தீபாவளி பண்டிகைக்காக மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். அதற்காக விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையத்தில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா ஆகிய ஊர்களுக்குச் செல்லும் விமான கட்டணகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.4,109ல் இருந்து ரூ.8,976, ரூ.13,317 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மதுரைக்கான கட்டணம் ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை அதிகரித்துள்ளது.