உடலில் கொழுப்பானது உடைக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் பொழுது, ஐசோப்ரின் என்னும் வேதிப்பொருள் வெளியாகும். இதனுடைய அளவு குறைவாக இருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த ஜிஜியாங் பல்கலைக்கழகம் சென்சார் ஒன்றை கண்டுபிடித்து மூச்சை வைத்து ஆய்வு நடத்தினர். இதைக் கொண்டு ஆராய்ந்த போது நுரையீரல் புற்றுநோய் இருந்தவர்களுக்கு குறைந்த அளவு ஐசோப்ரின் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.