வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

58பார்த்தது
திண்டுக்கல் கவடகார தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் கவடகார தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வாக்குப்பதிவு செய்ய இருக்கிறார். ‌ இந்த வாக்குச்சாவடி மையத்திலும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணி உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி