திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 5-ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 10-ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம், அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். விழாவின் ஏழாம் நாளான பிப்ரவரி 11 மாலை 4:45 மணிக்கு தைப்பூச விழா தேரோட்டம், பிப்ரவரி 14 மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறுகிறது. இதன் பின் இரவு கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.