தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

68பார்த்தது
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நூற்றுக்கு மேலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கூடும் இடம் பூங்காவாக திகழ்ந்துள்ளது. தோட்டக்கலை மற்றும் மகளிர் குழுவின் சார்பாகவும் தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வின் நோக்கமானது ஓட்டுக்கு வேண்டாம் நோட்டு வாக்களிப்பது என்னுடைய கடமையை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பிரையண்ட் பூங்காவில் உள்ளூர்வாசிகள் மட்டும் இன்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விழிப்புணர்வு சேரும் வண்ணம் நடத்தப்பட்டது.

உறுதியான நம்பிக்கை கொண்டு அமைதியாகவும் உண்மையாகவும் அச்சமின்றியும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதில் தோட்டக்கலை இயக்குனர் பிரிண்ட் பூங்கா கார்த்திகா, தேர்தல் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், மகளிர் குழு திட்ட இயக்குனர் சரவணன் தாசில்தார் சரவணவாசன் போன்ற கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி