திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆலமரத்தான் உள்ளிட்ட ஆறாவது மற்றும் மூன்றாவது வார்டு பகுதி மக்கள் பேரூராட்சி பொது வீதியை முத்துசாமி மகன் முத்துகிருஷ்ணன் சுப்பிரமணி மகன் முத்துச்சாமி சுப்பிரமணி மகன் பரமசிவம் கருப்புசாமி மகன் சசிகுமார் ஆகிய நான்கு பேரும் கூட்டு சேர்ந்து கொண்டு மாடசாமி வாரிசுகளுக்கு இந்த வீதியில் நடக்க உரிமை இல்லை என்று நடப்பதை தடுத்துவிட்டார்கள். மேலும் வீதியை அளக்க வந்த அதிகாரிகளை அளவீடு செய்யவிடாமல் அனுப்பிவிட்டனர். மேற்படி வீதியில் சுதந்திரமாக நடக்க போக்குவரத்தை பயன்படுத்த அளவீடு செய்து எங்களுக்கு உரிமைச் சான்று வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.