மது விற்பனையாளர்களை சிறைபிடித்து போராட்டம்

615பார்த்தது
மது விற்பனையாளர்களை சிறைபிடித்து போராட்டம்
திண்டுக்கல் அருகே பிரச்சாரத்துக்கு நடுவே பாமக வேட்பாளர் திலகபாமா மது விற்பனையாளர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து இன்று பிரச்சாரத்தை துவக்கிய பாம வேட்பாளர் திலகபாமா தாடிக்கொம்பு ரோடு வாணி விலாஸ் மேடு உட்பட பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். இவர் திண்டுக்கல் கொட்டபட்டி மற்றும் பொன்மாந்துறை புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கு கிளம்பினார்.

அப்போது திண்டுக்கல் கொட்டபட்டி சாலையில் கள்ளத்தனமாக மதுப் பாட்டில் விற்பனை செய்த குடோனை பாமக வேட்பாளர் திலகபாமா விற்பனையாளர்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு குவிந்தனர். இதுகுறித்து பாமக வேட்பாளர் திலகபாமா கூறியதாவது:

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ளன. 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. மது விற்பனையால் இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. இதை தடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன், என்றார்.

தொடர்புடைய செய்தி