திண்டுக்கல்: இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
தமிழகத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த அமரன் திரைக்காவியத்தை எஸ். டி. பி. ஐ கட்சியினர் உண்மைக்கு புறம்பாக திரையரங்குகளுக்கு முன் கூடி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியை தடை செய்திட வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் நிறுவனர் நெல்லை முபாரக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும் என்றும் சிலுவத்தூர் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூ ஏற்படுத்தும் வகையில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சாலைகளின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட வேண்டும் என்றும். வடமதுரையில் அறநிலை துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் இடத்தில் மாட்டு இறைச்சி கடைகள் வைத்து நடத்துவதால் கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் அந்தக் கடைகளை அறநிலைத்துறையினர் அப்புறப்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கைகளை முழங்கி கண்ணாடி தண்ணீர் பாட்டிலில் கெட்டுப்போன புழு வைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தலையில் சுமந்த வாரும் நாமும் சாத்தியும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி