காலி சேர்கள் முன் தேர்தல் பிரசாரம்

1909பார்த்தது
காலி சேர்கள் முன் தேர்தல் பிரசாரம்
திண்டுக்கல்லில் நேற்று பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

பிரசாரத்திற்கு அன்புமணி வருவார் என அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் ஏராளமான பொதுமக்களும் வாக்காளர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் பாமக நிர்வாகிகளை வேட்பாளரான திலகபாமா கண்டு கொள்ளாததால் பெரும்பான்மையானோர் பாஜக கொடிகளுடனும், பாஜக துண்டுகளுடன் பங்கேற்றனர். இது குறித்து உள்ளூர் பாமக நிர்வாகிகளிடம் பேசியபோது, திண்டுக்கல்லில் பிறந்தவர் என்றாலும் தொகுதியில் எந்த நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத திலகபாமா கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஐ. பெரியசாமியிடம் டெபாசிட்டை இழந்தார்.

இந்த நிலையில் 6 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட நாடாளுமன்ற வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்ட போது நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டுவரும் மாவட்ட செயலாளர் ஆக இருந்த ஜோதி முத்துவை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். மேலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முழுக்க முழுக்க பாஜக வேட்பாளர் போலவே திலகபாமா நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை தவிர்த்து நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட யாரையுமே அழைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி