மத்திய தோதல் பொதுப் பாா்வையாளர் ஆய்வு

54பார்த்தது
மத்திய தோதல் பொதுப் பாா்வையாளர் ஆய்வு
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான மத்திய தேர்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட பிரபுலிங் காவலிட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக மாவட்டத் தேர்தல் அலுவலா் மொ. நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: இந்தியத் தோதல் ஆணையத்தால் மத்திய தேர்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட பிரபுலிங் காவலிட்டி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தாா். மக்களவைத் தோதலையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு, கண்காணிப்பு மையம் ஆகியவற்றை அவா் ஆய்வு மேற்கொண்டாா். தேர்தல் தொடா்பான புகாா்களை, மத்தியத் தேர்தல் பொதுப் பாா்வையாளா் பிரபுலிங் காவலிட்டியிடம் நேரிலோ, 88074 91553, 0451-2461149 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

டேக்ஸ் :