பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த தாடிக்கொம்பு சௌந்தர்ராஜன் பெருமாள் திருக்கோவிலில் பக்தர்களால் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் மாடுகளை வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டு முதல் கட்டமாக ரூ. 6. 30 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
முன்னதாக ராமமூர்த்தி ரமேஷ் ஜெகநாதன் அரவிந்தன் மணியம் உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோபூஜை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் சுப்பிரமணி , அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழு, வீரக்குமார் , சண்முகவேல் நிர்மலா , மலைச்சாமி தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி தொழிலதிபர்கள் சுருளிராஜன் ஆடிட்டர் சிற்றம்பலம் ஆகியோர் குலசாலைக்கான அடிக்கலை நாட்டினர் மேலும் இந்த நிகழ்வில் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன் ராமானுஜம் கேப்டன் பிரபாகரன் சுசீலா சிறப்பாக செய்திருந்தனர்