ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள்

78பார்த்தது
சரக்கு வாகனங்களில் தேங்காய், மண், செங்கல், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில், அந்த பொருட்களின் மீதே ஆபத்தான நிலையில் அமர்ந்து தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். இவ்வாறு சரக்கு வாகனங்களில் அலட்சிய பயணம் மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக இன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியில் அதிக உயரத்தில் விவசாய பில் ஏற்றி கொண்டு வந்த வாகனத்தில் அந்த பில்லின் மீது அமர்ந்து தொழிலாளர்கள் பயணம் செய்வதால் மின் கம்பிகளில் உரசி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், வேறு வழியில்லாத நெருக்கடியாலும் பல தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்