விவசாய சங்க மகளிர் ஆலோசனை கூட்டம்

85பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம்
கூட்ரோட்டில், தமிழக
மலைவாழ் பழங்குடிகள் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில், பழங்குடியின மகளிர் கலந்தாய்வு கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இயற்கை விவசாய சங்க பொதுச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். அனைத்து விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைசாமி, உயர்மட்ட குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறுதானிய பயிர்கள் மற் றும் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு, பாப்பிரெட்டிப்பட்டியில் உழவர் சந்தை மற்றும் விவ சாய விளை பொருட்கள் விற்பனை மையம் அமைக்க வேண்டும். பால் விலையை அதிகரித்து வழங்க வேண் டும். நானாகுட்டை பகுதி யில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும்
கால்நடை மருத்துவமனைகிளை அமைக்க வேண் டும். பயிர்களை அழிக்கும் குரங்கு, மயில், மான், காட் டுப்பன்றி, காட்டெருமை ஆகியவற்றிலிருந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். கூட் டத்தில், தோட்டக்கலை துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள், விற்பனை குழு நிர்வாகிகள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
Job Suitcase

Jobs near you