தர்மபுரி: ஆசிரியையிடம் நகை பறித்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

58பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலமேலுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி ஓய்வு பெற்ற ஆசிரியை, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி இரவு தம்பி ராமனின் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு ஜோதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமனின் வீட்டில் பணிப்பெண்ணாகவேலை பார்த்து வந்த மாரியம்பட்டியைச் சேர்ந்த கனிமொழி ஜோதியை வயலில் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கனிமொழியை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கனிமொழி மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து கனிமொழிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :