தர்மபுரி மாவட்டம் அரூர் நெருப்பாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று எஸ்பி மகேஸ்வரனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, அரூர் நெருப்பாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்த நாங்கள், மாரியம்மன் மகளிர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளோம். இந்நிலையில் மகளிர் குழுவிற்கு அரசு வங்கியில் கடன் வாங்கி தரும் பணியை செய்து வரும் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த பெண் ஒருவர், குழு உறுப்பினர்களிடம் அறிமுகம் ஆனார். மேலும், எங்களது குழுவிற்கு வங்கியில் கடன் வாங்கித்தர நபருக்கு 4000 வீதம் 48 ஆயிரம் பெற்றுக் கொண்டு கடன் வாங்கி தருவதாக கூறினார். இதே போல், புதுரெட்டியூர் பகுதியை சேர்ந்த சில மகளிர் குழுக்களிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டதற்கு, தாமதம் செய்து ஏமாற்றி வருகிறார். எங்களிடம் கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டுதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேரியிருந்தனர்.