தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், தமாணிக்கோம்பை அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தமிழ்மணி அவர்கள் வரவேற்று பேசினார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயகாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் புரவலர்கள் அனந்த பத்மநாபன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேடியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் சித்ரா, மங்கையர்கரசி மற்றும் ஆசிரியர்கள் கண்மணி, ஷர்மிளா பானு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கியும் புரவலர் தொகை அளித்தும் சிறப்பித்தனர். விழாவில் புரவலர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பவித்ரா மற்றும் மாலதி ஆகியோர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக தலைமையாசிரியர் தமிழ்மணி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.