தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி தலைமையில் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நேற்று (செப்டம்பர் 25) மாலை பாமக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொம்மிடி முருகன் மஹாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, அரசாங்கம், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் திருமண மண்டபத்தில் நேற்று (செப்டம்பர் 25) இரவு முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி தலைமையில் அக்டோபர் 4ல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.