அரூர் காவல் நிலையத்தில் ஐஜி ஆய்வு

67பார்த்தது
அரூர் காவல் நிலையத்தில் ஐஜி ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் 33 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக அரூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரூர் காவல் நிலையத்தில் நேற்று மதுவிலக்கு பிரிவு ஐ ஜி. மயில்வாகனன் அவர்கள் வருகை தந்தார். மேலும் அவர் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் செயல்பாடுகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையம் வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மகேஸ்வரன் மற்றும் காவல் அதிகாரிகள் இருந்தனர்.