சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் எம். வேட்ரப்பட்டி மோட்டூர்கிராமத்தில் 1. 8 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் மக்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. இந்த நிலத்தில் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்த 36 பேருக்கும் பாளையம் புதூர் கிராமத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்ற விழாவில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். அதன் பேரில் பயனாளிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மோட்டூர் கிராம மக்கள் 1. 8 ஏக்கர் நிலம் மோட்டூர் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிலத்தில் மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்ததும் மொரப்பூர் கிராம மக்கள் கடந்த 9-ந்தேதிமொரப்பூரில் இருந்து மோட்டூர் செல்லும் சாலையில் மோட்டூர் கிராம மக்கள் அந்த வழியாக செல்லக்கூடாது எனக்கூறி கற்கள், குப்பைதொட்டிகளைகொண்டுசாலையை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக அண்ணல் நகரை சேர்ந்த தர்மன் (வயது 45), தீர்த்தான் (50), சிலம்பரசன் (38), செம்மலை (35) உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மொரப் பூர் கிராம நிர்வாக அலுவலர் மாலதி மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர்ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி