ஆங்கிலப் புத்தாண்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

69பார்த்தது
ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி தருமபுரி அன்னசாகரம் தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி  நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. இதில் கடந்த 2023-ஆம் ஆண்டுக்கு விடை அளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திங்கட்கிழமை அதிகாலை 2024-ஆம் ஆண்டு பிறப்பை வரவேற்று சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. புத்தாண்டு திருப்பலி அருட்பணி ஜாக்சன் தலமையில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்ராஜ் முதண்மைகுரு உள்ளிட்டஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்ற னா். ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா். இதனை தொடர்ந்து 2024 புத்தாண்டை வரவேற்கும் வகையில் வான வேடிக்கை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி