60 வயது மாமியாரை அடித்து துரத்திய மருமகள் (வீடியோ)

70பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே மதன் மஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுதாமா நகரில் வசிப்பவர் சவிதா விஸ்வகர்மா(60). இவரது மகன் கௌதம் விஸ்வகர்மாவுக்கு கருணா என்பவருடன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சவிதாவின் தலைவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து விட, வறுமையில் வாடும் சவிதா தனது மகனிடம் உதவி கேட்டு அவர் சென்றுள்ளார். ஆனால் சவிதாவின் மருமகள் அவரை கடுமையாக அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். இது அங்குள்ள சிசிடிவியில் பதிவான நிலையில், வீடியோ ஆதாரங்களை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி