விருத்தாசலம்: போதையில் வாலிபர் ரகளை - வைரலாகும் வீடியோ

6008பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் போதையில் அடாவடியில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் பலசரக்கு கடை நடத்தி வருபவரையும் வெளி மாநில வியாபாரியையும் தாக்கியுள்ளார். மேலும் அப்பகுதி வழியாகச் சென்ற பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொதுமக்களை அசிங்கமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி