கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மேற்கிருப்பு முதல் பெரியகாப்பான்குளம் செல்லும் சாலை சந்திப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிடத்தை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், ரேவதி, கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், விருத்தாசலம் வடக்கு வட்டார தலைவர் இராவணன், மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், பெரியகாப்பான்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண், காங்கிரஸ் தோழர்கள் ரகுபதி, சிராஜுதீன், ஆனந்த், பிரபாகரன், பள்ளிப்பட்டு பிரபாகரன், லெனின் அப்பகுதி வாழ் பொதுமக்கள் இருந்தனர்.