பெண்ணாடம்: 7 பேர் மீது வழக்குப் பதிவு

71பார்த்தது
பெண்ணாடம்: 7 பேர் மீது வழக்குப் பதிவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் அடுத்த துறையூர் கிராமத்தை சேர்ந்த வீராசாமி மனைவி பானுமதி. இவரது உறவினரான சுரேஷின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தையை பார்ப்பதற்காக சுரேஷ் வீட்டிற்கு பானுமதி சென்றுள்ளார். அப்போது பானுமதிக்கும், சுரேசுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம டைந்த சுரேஷ் அவரது தந்தை சின்னப்பையன் இவருடைய சகோதரர் ரமேஷ், தாய் பானுமதி உறவினர்கள் சாந்தா, மாலதி, தேவகி ஆகியோர் சேர்ந்து பானுமதியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் சுரேஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி