கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள் அன்பரசன் இவரது மனைவி சூர்யா இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஆன்ட்ரோஸ், ரோஷல் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி கடலூருக்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்றவர் அருள் அன்பரசன் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சூர்யா புகாரின்பேரில் காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அருள் அன்பரசனை தேடி வருகின்றனர்.