கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று வீரபாகு தேவர்கள் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை போல் வெடி வெடித்து வெகு விமரிசையாக கந்த சஷ்டியை கொண்டாடினர்.