கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வானத்தில் மிகப்பெரிய வானவில் ஒன்று தென்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகள் ஆச்சரியமாக பார்த்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.