கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் ஆய்வாளர் வசந்தம், செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூபாய் 5 லட்சத்து 31 ஆயிரத்து 673 ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி பொருட் களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.