ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடலூரில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரம்மாண்ட மேடை கட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த மேடையில் உரையாற்றியுள்ளனர். இந்த நிலையில் மேடையின் மேற்கூரை பழுதடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த மேடையானது திடீரென முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.