கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் இன்று வெறிச் சோடி காணப்படுகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து உள்ளதால் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.