நியூசிலாந்து வீரர்களை குறிவைக்கும் சிஎஸ்கே

574பார்த்தது
நியூசிலாந்து வீரர்களை குறிவைக்கும் சிஎஸ்கே
ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளார். அவருக்காக டெல்லி, பஞ்சாப், சென்னை அணிகள் ஏலத்தில் போட்டியிட்டன. அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடியில் ஆரம்பித்த சென்னை அணி இறுதியாக ரூ.14 கோடிக்கு இவரை வாங்கியுள்ளது. அதே போல் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ரூ.1.80 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 2023 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் ஆவர். ரச்சின் 578 ரன்களும் டேரில் மிட்செல் 552 ரன்களும் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி