விழுப்புரம் வல்லம் பகுதியை சேர்ந்த குமார் (40) - மகாராணி (35) தம்பதி கடந்த ஞாயிறு (நவ. 10) ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் தம்பதியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் நேற்று (நவ. 11) சாலை மறியல் செய்தனர். இது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.