காங்கிரஸ் தனித்து போட்டி.. கார்கே அதிரடி

85பார்த்தது
காங்கிரஸ் தனித்து போட்டி.. கார்கே அதிரடி
பஞ்சாபின் லூதியானாவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசுகையில், ‘சில மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்பது உண்மைதான். கூட்டணி வேண்டும் என்று விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லை என்றால் பிரச்னை ஏதுமில்லை. ‘இந்தியா’ கூட்டணியில், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறிவிடமுடியாது. ஒருமித்த கருத்து இல்லாத தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். இந்த முடிவு பஞ்சாபிற்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் இதே முடிவுதான்’ என்று கூறினார்.