கோவை: கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

54பார்த்தது
சிறுவாணி அணைப் பகுதி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, அப்பகுதி பழங்குடியின மக்கள் கூச்சலிட்டு விரட்டியடித்தனர். இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் வனவிலங்குகள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி பகுதியில் யானை ஒன்று உணவு தேடிய பரிதாப காட்சிகள் வெளியானது. 

நேற்று (ஏப்ரல் 10), கோவை குற்றாலம் அருகே சாடிவயல் கிராமத்திற்குள் ஒற்றை யானை நுழைய முயன்றபோது, பழங்குடியினர் ஒன்று திரண்டு கூச்சலிட்டு விரட்டியடித்தனர். இதனால் யானை கிராமத்திற்குள் நுழையாமல் வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி