தொண்டாமுத்தூர் - Thondamuthur

கோவை: வாலிபரை மிரட்டி பணம், செல்போன் பறித்தவர் கைது

கோவை: வாலிபரை மிரட்டி பணம், செல்போன் பறித்தவர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (32) என்பவர் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் செயலியின் மூலம் வேல்முருகனை ஓரிச்சேரிக்கு அழைத்து, ₹9,500 மற்றும் செல்போனை 3 பேர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்றது பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆலன் சாம் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்து, அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஒன்பதாயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా