நமக்கான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும்

78பார்த்தது
கோவையில் வெள்ளிக்கிழமை இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கோவை லாலி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கூறுகையில், இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கோவை மாவட்டம் மக்கள் தொகையிலும், சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் விமான விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக அனைத்து கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நாளில் நமக்கு தேவையான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி