மருதமலை பகுதியில் நாய் கடித்து மூன்று மான்கள் உயிரிழப்பு

54பார்த்தது
மருதமலை பகுதியில் நாய் கடித்து மூன்று மான்கள் உயிரிழப்பு
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று மான்களை நாய்கள் துறத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட்டது

இதில் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் தென்பட்டது அருகில் சென்று பார்த்த போது மானின்  உடலில் ஆங்காங்கே சிறிய  ரத்த காயம் தென்பட்டது மேலும் அப்பகுதியில் நாய்களின் கால்தடம் தென்ப்பட்டது உடனடியாக உரிய வழிமுறையாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி வடவள்ளி கால்நடை மருத்துவர் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி