அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி வேலுமணி செய்தியாளர்களுக்கு இன்று (06.06.2024) கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19. 3% வாக்குகள் அதிமுக பெற்றது என குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலில் 20. 4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார்.
மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. எனக் கூறிய அவர் தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும் என்றார். அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது என் குற்றம் சாட்டினார்.