பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை பேட்டி

53பார்த்தது
கோயம்புத்தூர் பகுதியில் வாக்குப் பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாக்களிப்பதற்காக ஆர்வமாக இங்கு வருகின்றனர். கணவருக்கு ஒரு வாக்கு சாவடி, மனைவிக்கு மற்றொரு வாக்குச் சாவடி மையத்திலும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஒரு பாராளுமன்ற தொகுதியின் ஒரே இடத்தில் இருந்து 830 வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த வாக்கு சாவடி மையத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பா. ஜ. க சார்பில் இதற்கான போராட்டமும் தீர்வையும் தேடி வருகிறோம். இருந்தும் மக்கள் உற்சாகமாக தங்களது வாக்களிக்கும் உரிமையை செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் முதியோர்களுக்கான போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்வதிலும் சுணக்கம் காட்டி உள்ளது. இருந்தும் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி