விஸ்வ பாரத் மக்கள் கட்சி மாநில, மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

55பார்த்தது
விஸ்வ பாரத் மக்கள் கட்சி
மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


விஸ்வ பாரத் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பாபுஜி சாமிகள் தலைமை வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு
கட்சியை எப்படி பலப்படுத்துவது என்பது குறித்தும், அவர்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும். அவரவர் பகுதிகளில் பொறுப்பாளர்கள் போட்டு விஸ்வகர்மா சமுதாய மக்கள் இருக்கிற தங்க நகை பட்டறை, கிரில் பட்டறை, சிற்ப பட்டறை பாத்திர பட்டறைகளில் உள்ளவர்களை எல்லாம் கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விஸ்வகர்மா சமுதாய குழந்தைகளுக்கு 3. 5 இட ஒதுக்கீடு வேண்டும். சிறுபட்டறைகளுக்கு இலவச மின்சாரம் வேண்டும்.
தங்க நகை தொழிலாளர்களை அரசு வேலையில் நியமனம் செய்ய வேண்டு. வீடு இல்லாமல் தொழில் நலிவடைந்துள்ள, பெண்களுக்கு இடத்துடன் கூடிய சொந்த வீடு வேண்டும் என்றார்.
கூட்டதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி