கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கட்சியில் இருந்து விலகியவர்கள் குறித்த கேள்விக்கு,
கட்சியில் இருந்து வெளியேறி விட்டீர்கள் அல்லவா, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் கூட்டணி அமைத்து வென்று கொள்ளலாம். என்னுடைய கட்சியில் முழு சுதந்திரம் உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம். சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தொகுதி சீரமைப்பு, தொடங்கும் பொழுதே நான் எதிர்த்து பேசி விட்டேன். அனைத்து கட்சி கூட்டம் போட்டு பேச வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. அதிக எம்பிக்கள் தி. மு. க வில் இருக்கிறார்கள், அப்படியானால் அவர்கள் தான் தர்க்கம் பண்ணி தீர்த்துக் கொள்ள வேண்டும், இங்கு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி எந்த பிரயோஜனமும் இல்லை.
மறுசீரமைப்பு என்பதில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால், 30 கோடி மக்கள் இருக்கும் போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், 150 கோடி மக்கள் தொகை தொட்ட பிறகு மக்களின் பிரதிநிதிக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும், ஆனால் அது இல்லை, ஆறு சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற இன்று இருப்பதை மாற்றி, மூன்று சட்டமன்றங்களுக்கு ஒரு நாடாளுமன்றம் என்று கொண்டு வரும் போது உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.