கோவையில் தியானத்தில் ஈடுபட உள்ள மக்கள்

66பார்த்தது
கோவையில் தியானத்தில் ஈடுபட உள்ள மக்கள்
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று கோயம்புத்தூர் மெடிடேட்ஸ் சார்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சசிரேகா, கூறுகையில்.
கல்வி மற்றும் மனித நேய மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற அமைப்பாக 'வாழும் கலை அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பு சார்பாக வருகின்ற மார்ச் 2ம்தேதி மற்றும் 3ம்தேதிகளில், கோவை கொடிசியா மைதானம் மற்றும் கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்டமான தியானம் மற்றும் மகா ருத்ர பூஜை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள் இல்லாத இந்தியா' எனும் திட்டத்திற்கு ஆதரவளிக்கவும், தியானத்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக கோவைக்கு வருகை தரும் இந்த அமைப்பின் நிறுவனரான 'குருதேவ்' ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்த 2 நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தலைமை தங்குவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியானது தியானத்தின் மூலம் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த மனநிலை மாற்றத்தை பற்றிய அனுபவத்தையும் விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி